கொலை முயற்சி வழக்கு – தந்தை, மகனுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை | Kanchipuram Murder Attempt Case: Father and Son Sentenced to 10 Years Jail with ₹5 Lakh Fine
காஞ்சிபுரம், செப். 15:
பரந்தூரைச் சேர்ந்த விநாயகம் (48) கடந்த 2022 ஆம் ஆண்டு தனது கிராமத்தில் நடந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த அரசு (31) மற்றும் அவரது தந்தை திருமால் (65) ஆகியோருடன் முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து, விநாயகம் கொடுத்த புகாரின் பேரில் பொன்னேரிக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து, தந்தை-மகன் இருவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு காஞ்சிபுரம் கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் அரசு வழக்குரைஞர் அன்பு, உதவி வழக்குரைஞர் சந்தியா ஆகியோர் ஆஜராகினர்.
வழக்கை விசாரித்த கூடுதல் நீதிபதி, தந்தை திருமாலும் மகன் அரசும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தீர்ப்புக்கு பின் இருவரும் காவல்துறையினரால் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
No comments
Thank you for your comments