Breaking News

பசுமை தமிழக தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் மரக்கன்று நடும் விழா


தமிழ்நாடு காடு வளர்ப்பை 2030-31க்குள் 33% ஆக உயர்த்துவதற்காகவும், பரவலாக மரக்கன்று நட்டு பசுமை பரப்பை அதிகரிக்கும் விதமாக, தமிழ்நாடு அரசின் சார்பில் சுற்றுச்சூழல் திட்டமான "பசுமை தமிழ்நாடு இயக்கம்" தொடங்கப்பட்ட நாளை குறிக்கும் விதமாக, செப்டம்பர் 24 அன்று பசுமை தமிழக தினம் கொண்டாடப்படுகிறது.  

அந்த வகையில், பசுமை தமிழக தினமான இன்று, தமிழ்நாடு வனத்துறை தலைமையிடத்து சரகம் மற்றும் வனவிரிவாக்கம் மையம், காஞ்சிபுரம் வனக்கோட்டம் சார்பில் சிறுவள்ளூர் கிராமத்தில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.  

இதில் சிறப்பு விருந்தினர்களாக, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டு, பள்ளி மாணவர்களுடன் இணைந்து மரக்கன்று நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் ரவிமீனா, வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் ஆர்.கே. தேவேந்திரன், சிறுவள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் சரளாதேவி ஏகாம்பரம், வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளி முதல்வர் சுரேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments