உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை எம்எல்ஏ எழிலரசன் நேரில் ஆய்வு
காஞ்சிபுரம் செப் 24:
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு பகுதியில் செங்கொழிநீரோடை வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமை தாங்கினார். ஆணையர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.
காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ எழிலரசன் பார்வையிட்டு, முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, பதிவு செய்வதையும் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
பின்பு முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் காக்கும் வகையில் மருத்துவ சேவைகள் வழங்க அமைக்கப்பட்டு இருந்த மருத்துவ முகாமினையும் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் பெறப்படுவதையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் இம்முகாமில் துறை சார்ந்த சான்றிதழ் உடனடியாக சரி பார்க்கப்பட்டு பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு, மருத்துவ காப்பீடு, வருவாய் துறை சான்றிதழ்களை வழங்கினார்.
இதனை தொடர்ந்து முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் முகாமில் அளிக்கப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து மக்களின் குறைகளுக்கு தீர்வு காணப்படுவதால் முகாம் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.
இந்த வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு எங்களது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவித்தனர்.
இந்நிகழ்வின்போது காஞ்சிபுரம் வட்டாட்சியர் ரபிக், மாநகராட்சி கவுன்சிலர்கள் ஜோதிலட்சுமி சிவாஜி, சுரேஷ் மற்றும் தீபம் சுரேஷ் வட்டச் செயலாளர் ஜெய் கணேஷ் மாநகர பிரதிநிதி பகவான், துணைச் செயலாளர்கள் குடியரசு, தனலட்சுமி, வட்டப்பிரதிநிதிகள் முத்து, பலராமன், பாக்யராஜ், தாகூர், யூனிஸ், மணிகண்டன், சத்யநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments