Breaking News

காஞ்சிபுரத்தில் தேசிகன் சுவாமி வீதியுலாவின் போது தண்டம் முறிந்து போக்குவரத்து பாதிப்பு

காஞ்சிபுரம்,செப்.26:

காஞ்சிபுரத்தில் தேசிகன் சுவாமி ஹம்ச வாகனத்தில் வீதியுலா வந்த போது சுவாமியை தாங்கி நிற்கும் தண்டம் முறிந்ததால் சுமார் 40 நிமிடத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்தனர்.


காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ளது தூப்புல் வேதாந்த தேசிகன் திருக்கோயில். இக்கோயிலில் தேசிகன் சுவாமிகளின் அவதாரத் திருவிழா இம்மாதம் 23 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து வரும் அக்.3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

📌  Fruits Are Yummy! 🍎🍌 Energetic & Happy Mood Songs
🎉 Don’t forget to LIKE 👍 and SUBSCRIBE 🔔 to join the fun!  


விழாவின் 4 வது நாள் நிகழ்வாக தேசிகன் சுவாமிகள் காலையில் தங்கப்பல்லக்கில் பரவாசுதேவன் அலங்காரத்தில் வீதியுலா வந்தார்.மாலையில் தேசிகன் சுவாமிகள் ஹம்ச வாகனத்தில் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெரு வழியாக வீதியுலா வந்து கொண்டிருந்த போது சாலம்மாள் திருமண மண்டபம் அருகில் திடீரென சுவாமியை தாங்கி நிற்கும் வலது பக்கமிருக்கும் மரத்தாலான தண்டம் நடுப்பகுதியில் முறிந்தது.

திருப்பாதம் தாங்கிகள் சுவாமியை அதே இடத்தில் நிறுத்தி வைத்தனர்.இதனால் சுமார் 40 நிமிடங்களுக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சுவாமி வீதியுலாவின் போது பாதுகாப்புக்கு வந்திருந்த விஷ்ணுகாஞ்சி காவல் துறையினர் போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து சுவாமி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அருகில் உள்ள தேசிகன் சுவாமி கோயிலிலிருந்து புதிய மரத்தாலான தண்டம் கொண்டு வரப்பட்டு மாற்றப்பட்டு மீண்டும் சுவாமி வீதியுலா சென்றது.

No comments

Thank you for your comments