Breaking News

உலக சைகைமொழி தின விழிப்புணர்வு பேரணி - ஆட்சியர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்

காஞ்சிபுரம்,செப்.26:

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உலக சைகைமொழி தினம் மற்றும் சர்வதேச காது கேளாதோர் தின விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

📌  Fruits Are Yummy! 🍎🍌 Energetic & Happy Mood Songs
🎉 Don’t forget to LIKE 👍 and SUBSCRIBE 🔔 to join the fun!  


காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உலக சைகைமொழி தினம் மற்றும் சர்வதேச காது கேளாதோர் தின விழிப்புணர்வு பேரணி ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கியது.பேரணியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

தொடக்க நிகழ்வில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ரா.மலர்விழி,காது கேளாதோருக்கான அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழாண்டு செப்.23 ஆம் தேதி முதல் வரும் 29 ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு உலக சைகை மொழி தினம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொண்டாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments