Breaking News

இன்றைய முக்கியச்செய்திகள் today headlines News

 விஜய் பிரசாரம் - நிபந்தனைகளை விதித்த‌ காவல்துறை

 கரூரில் விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி இல்லை.

பொதுக்கூட்டம் முடிந்த பின்பு கொடிகள் பதாகைகளை உடனே அகற்ற வேண்டும்.

 அனுமதி இல்லாமல் எல்இடிதிரை, மேடை அமைக்க கூடாது.

 அனுமதி பெறாமல் பதாகைகள் வைத்தால் சட்ட நடவடிக்கை பாயும்.


சிவாஜி கணேசனை விட மிகவும் சிறந்த நடிகர் செந்தில் பாலாஜி - இபிஎஸ் சாடல்

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை நடத்தி வருகிறார்.

அந்த வகையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் எடப்பாடி பழனிசாமி  தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

அப்போது செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்து பேசியதாவது, 

சிவாஜி கணேசனை விட மிகவும் சிறந்த நடிகர் செந்தில் பாலாஜி.

செந்தில் பாலாஜி தேர்தலின்போது மக்களுக்கு வெள்ளி கொலுசு கொடுத்துள்ளார். 

செந்தில் பாலாஜிக்கு அளவுக்கு அதிகமான அதிகாரம் தரப்பட்டுள்ளது.

தேர்தல் முடியும் வரை தான் செந்தில் பாலாஜி திமுகவில் இருப்பார், தேர்தல் முடிந்த பின் எந்த கட்சியில் இருப்பார் என தெரியாது.

கரூரில் நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புக்கு மணல் திருட்டு நடைபெறுகிறது. செந்தில் பாலாஜியால் அவரையே காப்பாற்றிக் கொள்ள முடியாது, அவரை நம்ப வேண்டாம்.

இவ்வாறு கடுமையாக சாடினார்.


தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்?

தமிழ்நாட்டின் டிஜிபியாக பணியாற்றி வந்த சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் 31 ஓய்வு பெற்ற நிலையில், அடுத்த டிஜிபி யார் என்பது குறித்து மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்களுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக பொறுப்பு டிஜிபி-யாக காவல்துறை அதிகாரி வெங்கட்ராமனை தமிழ்நாடு அரசு நியமித்திருந்த நிலையில், அந்த நியமனம் சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய உத்தரவுகளை மீறுவதாக கடும் எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டன.


"ஆட்சி மாற்றம் விரும்புவோர் வரலாம்” - தலைவர் ஜி.கே.வாசன்

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான போட்டி முன்கூட்டியே தொடங்கிவிட்டது. தமிழக மக்கள் வரும் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மனநிலையில் உள்ளனர். ஆட்சி மாற்றத்தை விரும்பும் யாராக இருந்தாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரலாம் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.


2,417 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்

ஜன.20 முதல் செப்.25 வரை 2,417 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.


47 அணு குண்டுகளை தயாரிக்க யுரேனியம் ரெடி

47 அணு குண்டுகளை தயாரிக்க தேவையான, 2 டன் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வடகொரியா வைத்துள்ளதாக தென்கொரியா எச்சரித்துள்ளது. ஏற்கனவே 50 அணு குண்டுகளை வடகொரியா வைத்துள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.


இறுதிப்போட்டியில் இந்தியா vs பாகிஸ்தான் எகிறும் எதிர்பார்ப்பு

ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில், வங்காள தேச அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.28ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில், இந்தியாவை எதிர்கொள்கிறது. ஆசிய கோப்பை வரலாற்றில் முதல்முறையாக, இரு அணிகளும் இறுதிப்போட்டியில் மோதுவதால் எதிர்பார்ப்பு எகிறுகிறது


டொனால்ட் டிரம்ப்புக்கு நோபல் பரிசு இல்லை

அமைதிக்கான நோபல் பரிசை விரும்பும் டொனால்ட் டிரம்ப்புக்கு இந்தாண்டு பரிசு இல்லை. டிரம்ப்பின் நடவடிக்கைகளால் நிதி பற்றாக்குறையை எதிர்கொள்ளும், ஏதேனும் ஒரு சர்வதேச மனிதாபிமான அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. 2025ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வரும் அக்.10 அன்று அறிவிக்கப்பட உள்ளது.


பதவியில் இருந்து விலகுவேன்
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

உக்ரைன் அதிபராக இருக்கும் ஜெலன்ஸ்கி, ரஷியா உடனான போர் முடிவுக்கு வந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகுவேன். மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.



No comments

Thank you for your comments