Breaking News

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இளைஞர் எழுச்சி கருத்தரங்கம்

 காஞ்சிபுரம், செப்.9:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சிபுரம் கிளை சார்பில் இளைஞர் எழுச்சிக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை கிளைத் தலைவர் சாகுல்ஹமீது தலைமையில் நடைபெற்றது.


இஸ்லாத்தில் இல்லாத மூடநம்பிக்கைகள் குறித்த கலந்தாய்வும், இளைஞர் எழுச்சி கருத்தரங்கமும் நடைபெற்றது. இதில் மாவட்ட துணைத் தலைவர் அன்சாரி, மாவட்ட மருத்துவ அணியின் செயலாளர் சர்புதீன், செயலாளர் சாகுல்ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில பேச்சாளர் எம்.ஏ. அப்துல்ரகுமான் கலந்து கொண்டு “மூடநம்பிக்கைகளும் அதனால் ஏற்படும் தீமைகளும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

கருத்தரங்கில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். நிறைவாக பொருளாளர் பாசில் நன்றி கூறினார்.

No comments

Thank you for your comments