வானூர்தியே இல்லாத போது பரந்தூரில் விமான நிலையம் தேவையில்லை, காஞ்சிபுரத்தில் சீமான் பேட்டி
காஞ்சிபுரம்,செப்.6:
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் சொந்த நிலத்தில் அகதிகளாகும் தமிழர்கள் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு முன்னதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியது..
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் 1300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.அங்கிருந்து பறப்பதற்கே வானூர்தி இல்லாத போது மேலும் ஒரு விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படுவது தேவையற்றது.ஏர்பூட்டி உழுதால் தான் யாரும் சாப்பிட முடியும்.ஏர்ப்போட் வந்தால் யாரும் சாப்பிட முடியாது.
இயற்கை விளைநிலங்கள் அனைத்தும் அழிந்து போகும். வெளிநாடுகளில் 680 ஏக்கர், 861 ஏக்கர் பரப்பளவில் தான் விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் பறப்பதற்கு ஏராளமான வானூர்திகளும் இருக்கின்றன.ஆனால் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பறப்பதற்கே வானூர்தி இல்லை. இச்சூழ்நிலையில் பரந்தூரில் விமான நிலையம் தேவையற்றது.
விளை நிலங்களை அழித்து பரந்தூரில் விமான நிலையத்தை அமைக்க விடவே மாட்டோம். மக்களை அச்சுறுத்தி விமான நிலையத்திற்கு இடம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
👍சகல தோஷ நிவாரணம் தரும் அரிய தலம் – நவகிரகங்கள் தம்பதியராய் அருள்புரியும் அதிசயம்!
பரந்தூரில் விமான நிலையம் அமைந்தால் தனிப்பெரும் முதலாளிகளின் வளர்ச்சியாகத் தான் அது இருக்குமே தவிர ஒட்டு மொத்த நாட்டின் வளர்ச்சி என்று சொல்ல முடியாது.
பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கொண்டு வந்ததே அதிமுக தான். அதை திமுக தொடர்கிறது. அதே போல பல ஏக்கர் பரப்பளவில் கோயம்பேடு பேருந்து நிலையம் இருக்கும் போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தேவையில்லாதது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தையும் அதிமுக தான் முதலில் கொண்டு வந்தது. இப்போது திமுக பேருந்து நிலையத்தை அமைத்திருக்கிறது.
காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லை. எழுதுவதற்கும், பேசுவதற்கும் குண்டர்கள் பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்துகிறார்கள்.
தலைவர்களுக்கே அச்சுறுத்தல் இருக்கும் சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிற போது சாதாரண மக்கள் எப்படி வாழ முடியும் எனத் தெரியவில்லை என்றார்.
No comments
Thank you for your comments