அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்...!
கோவை தடாகம் சாலையில் இயங்கி வரும் அமிர்தா இண்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் கல்லூரி தலைமை செயல் அதிகாரி சுரேஷ் குமார் தலைமையில் ஓணம் திருவிழா நடைபெற்றது.
இதில் மாணவியர்கள் அத்தப்பூ கோலம் போட்டு,மகாபலி சக்கரவர்த்திக்கு வரவேற்பு அளித்தனர். மேலும் ஊஞ்சல், வடம் பிடித்து இழுத்தல், உறியடி, பந்து விளையாட்டு, ஓணம் சத்யா விருந்து மிக சிறப்பாக கொண்டினர்.இந்நிகழ்ச்சியில் ரேடிசன் புளு நட்சத்திர ஹோட்டலின் ஹெச் ஆர் ஸ்பெஷலிஸ்ட் வினிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.அதனைத் தொடர்ந்து மாணவ மாணவியர்கள் ஏற்பாடு செய்த ஓணம் சத்யா விருந்தில் உணவு வகைகளை மதிப்பீடு செய்து சான்றிதழ்கள் வழங்கினார்.
இது குறித்து கூறுகையில் ஓணம் பண்டிகையில் மிகவும் சிறப்பு சத்யா விருந்து ஆகும். அதில் 20 முதல் 26 வகையான உணவு வைக்கப்படும் என்றார். ஆனால் இங்கு கோவை அமிர்தா மாணவ மாணவியர்கள் 30 கும் மேற்பட்ட உணவு வகைகள் வைத்து அசத்தியுள்ளார்.இந்நிகழ்ச்சியில் இன்ஸ்ட்டியூட் ஏஒ புவனேஸ்வரி, ஹெச்ஓடி கார்த்திக் கேசவன் மற்றும் மாணவ மாணவியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



No comments
Thank you for your comments