Breaking News

காஞ்சிபுரத்தில் இந்தியன் வங்கி சுவக்ஷதா ஹை சேவா விழிப்புணர்வு நடைபயணம்

இந்தியன் வங்கி காஞ்சிபுரம் மண்டலம் சார்பில் சுவக்ஷதா ஹை சேவா பிரச்சாரத்தின் கீழ், தூய்மை பாரத் விழிப்புணர்வு நடைபயணம் சிறப்பாக நடைபெற்றது.

இது இந்தியன் வங்கி மண்டல மேலாளர் திருமதி ஸ்ரீமதி தலைமையில் நடைபெற்றது. மண்டல துணை மேலாளர் திருமதி லீலா, முன்னோடி வங்கி மேலாளர், மண்டல அலுவலர்கள் மற்றும் காஞ்சிபுரம் கிளை மேலாளர்கள் கலந்து கொண்டு மக்களுக்கு தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நடைபயணத்தின் போது பெரிய காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் மற்றும் பூ மார்க்கெட் பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.








No comments

Thank you for your comments