உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ எழிலரசன்
பின்பு முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில் மருத்துவ சேவைகள் வழங்க அமைக்கப்பட்டு இருந்த மருத்துவ முகாமினையும் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் பெறப்படுவதையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் இம்முகாமில் துறை சார்ந்த சான்றிதழ் உடனடியாக சரி பார்க்கப்பட்டு பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு, மருத்துவ காப்பீடு, வருவாய் துறை சான்றிதழ்களை வழங்கினார்.
தொடர்ந்து முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் முகாமில் அளிக்கப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து மக்களின் குறைகளுக்கு தீர்வு காணப்படுவதால் முகாம் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.
இந்த வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்களது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவித்தனர்.
No comments
Thank you for your comments