Breaking News

தாமல் கிராமத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்- அமைச்சர் ஆர்.காந்தி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

காஞ்சிபுரம், செப்.6:

காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமை சனிக்கிழமை கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.


காஞ்சிபுரம் அருகேயுள்ள தாமல் கிராமத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நலன் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.முகாமை கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டு பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் பரிசோதனைகளை ஆய்வு செய்தார்கள்.

முக்கிய எச்சரிக்கை : போலி ஈ-சலான் மோசடி! 

 காஞ்சிபுரம் சைபர் குற்றப்பிரிவு #awareness

இதனைத் தொடர்ந்து 11 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு அடையாள அட்டைகள், 13கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், முகாமில் சிறப்பாக பணியாற்றிய மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், 7 பயனாளிகளுக்கு தொழிலாளர் நல வாரிய அட்டைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.


முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தார்.எம்பி.க.செல்வம்,எம்எல்ஏ எழிலரசன், ஒன்றியக்குழு தலைவர் மலர்க்கொடி குமார், மாவட்ட ஊராட்சிக் குழுவின் துணைத் தலைவர் நித்யா.சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் மருத்துவப்பணிகள் துறையின் இணை இயக்குநர் நளினி, மாவட்ட சுகாதார அலுவலர் த.ரா.செந்தில் மற்றும் மருத்துவக் குழுவினர்,உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள்,பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments