Breaking News

👮‍♂️ தமிழ்நாடு காவலர் தினம் | காஞ்சிபுரம் எஸ்.பி சண்முகம் தலைமையில் உறுதிமொழி | Police Day 2025

தமிழ்நாடு காவலர் தினத்தை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் எஸ்.பி சண்முகம் தலைமையில் காவல்துறையினர் உறுதிமொழி ஏற்றனர்.


தமிழகத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் 6ம் தேதி தமிழ்நாடு காவலர் தினம் கொண்டாடப்பட உள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

இத்தினமானது 6 செப்டம்பர் 1859-ல் மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றபட்டதன் நினைவாக தமிழ்நாடு காவலர் தினம் கொண்டாடப்படுகிறது.


இதனையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் எஸ். பி சண்முகம் தலைமையில் காவல் துறையினர், பணியின்போது அனைவரையும் சரிசமமாக நடத்துவோம் என்றும், காவல் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடப்பேன் என்று எஸ்பி சண்முகம் வாசிக்க அனைத்து நிலை காவல்துறையினர் காவலர் தின உறுதிமொழி ஏற்றனர்.

மேலும் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் நினைவு தூண் இடத்தில் எஸ்.பி உள்ளிட்ட  அனைவரும் மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர். 



காவலர் தினத்தினையொட்டி பயிற்சி மைதானத்தில் பொதுமக்களின் பாதுகாப்பிற்க்காக காவல்துறை பயன்படும் பாதுகாப்பு உபகரணங்கள் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட உள்ளது.

No comments

Thank you for your comments