Breaking News

சிறுபாக்கம் – தஞ்சாவூர் புதிய பேருந்து சேவை தொடக்கம்

 விருத்தாசலம், செப்.10:




தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் தலைமையில், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கொடியசைத்து பேருந்து சேவையை துவக்கி வைத்தார்.

🌸🔥 விபூதி யோகம் – வாழ்வை மாற்றும் தெய்வீக ரகசியம் 🙏 #astrology


சிறுபாக்கம், கிராமபுரம், திட்டக்குடி, அரியலூர் வழியாக தஞ்சாவூர் வரை செல்லக்கூடிய தடம் எண் 480 கொண்ட இந்த புதிய பேருந்து சேவையை, கிராம மக்கள் மேளதாளங்களுடன் உற்சாகமாக வரவேற்றனர்.

பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்த நிலையில், இப்போது அந்த கோரிக்கை நிறைவேறியதால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

📞 செய்தியாளர்: R. காமராஜ் – 9080215691
📸 ஒளிப்பதிவாளர்: V. வேல்முருகன் – 8072117545









No comments

Thank you for your comments