டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற கார்மேல் கார்டன் பள்ளி முதல்வருக்கு பாராட்டு விழா...!!
கோவை புலியகுளம் பகுதியில் இயங்கி வரும் கார்மல் கார்டன் பதின்ம மேல்நிலை பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளர் முனைவர் அருட்தந்தை ஆரோக்கிய ததேயூஸ்க்கு நல்லாசிரியர் விருது பெற்றதை கொண்டாடும் வகையில் பாராட்டு விழா பள்ளியின் கூட்டரங்கில் நடைபெற்றது.
இது குறித்து பள்ளியின் முதல்வர் ததேயூஸ் கூறியதாவது டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை பெற்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.கல்வி துறைக்கும் கல்வி பணிக்கும் நான் ஆற்றிய பணி மிக மிக நன்று என்று உணர்கிறேன் இது ஒரு அடையாளம் இந்த அடையாளத்தை மேலும் வழுப்படுத்த அனேக பணிகளை மாணவர் சமுதாயத்திற்கு செய்ய விரும்புகிறேன் என்றார். மேலும் எனக்கு விருது வழங்கிய தமிழக அரசு துணை முதல்வருக்கும் பள்ளிக்கல்வித்துறை கற்கும் இத்தருணத்தில் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை பரிந்துரை செய்த மாவட்ட பள்ளி கல்வி துறைக்கு கார்மல் கார்டன் பள்ளி நிர்வாகம் சார்பாகவும் எனது சார்பாகவும் நன்றிகளை உரித்தாக்குகிறேன். என்னை வழிநடத்திய மேதகு ஆயர்கள் குருக்கள், முன்னாள் மாணவர்கள், முன்னாள் ஆசிரியர்களும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினர்களாக மறை மாவட்ட மேதகு ஆயர் தாமஸ் அக்குவினாஸ், முதன்மை குரு பேரருட் ஜான் ஜோசப் தானிஸ் அடிகளார் மற்றும் சிறப்பு விருந்தினராக புனிதா அந்தோனியம்மாள், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜோ.தன்ராஜ், முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புறையாற்றி சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆசிரியர்கள், உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


No comments
Thank you for your comments