Breaking News

ஸ்ரீ நாராயண மிஷன் சார்பாக 171வது ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி விழா..!

கோவை சாய்பாபா காலனி ஸ்ரீ நாராயண குரு பொற்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயண மிஷன் பிரார்த்தனை கூடத்தில் ஸ்ரீ நாராயண மிஷன் , ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளை மற்றும் கோயமுத்தூர் ஸ்ரீ நாராயண குரு சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக 171வது ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி விழா பிரம்மாண்டமாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது. குரு ஜெயந்தி விழாவிற்கு தலைவர் கே.வேலாயுதன், பொது செயலாளர் டி.எஸ். ஹரிஷ்குமார் மற்றும் என்.மோகனன் ஆகியோர் தலைமை வகித்தனர்.



ஜெயந்தி விழாவின் முதற் நிகழ்ச்சியாக கொடியேற்று விழாவினை வேலாயுதன் தலைவர் கொடியேற்றி துவங்கி வைத்தார். பின்னர் குரு ஜெயந்தி விழாவினை சிவகிரி மடம் சுவாமி ஞான தீர்த்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார். பின்னர் மாபெரும் சமபந்தி அன்னதானம் டிரஸ்டி சாமி மற்றும் தலைவர் வேலாயுதம் ஆகியோர் துவக்கி வைத்தனர். அன்னதானத்தில் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உண்டு மகிழ்ந்தனர் அதுமட்டுமின்றி ஆசிரமங்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனைத்தொடர்ந்து குரு ஜெயந்தி ஊர்வலம் சென்டை மேலத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து ஜெயந்தி சம்மேளனம் நிகழ்ச்சியில் கேரளா யுவகலா சாகிதியின் மாநில தலைவர் ஆலங்கோடு லீலா கிருஷ்ணன், சிவகிரி மடம் சுவாமி ஞான தீர்த்தா, ஸ்ரீ மதி சஷி சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி சிறப்பித்தனர்.மேலும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றவர்கள் சிறந்த ஆசிரியர்கள் பள்ளி கல்லூரி முதல்வர்கள் ஆகியோருக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி விழாவில் மிஷன் துணை தலைவர்கள் .மணிகண்டன், சஜீஷ்குமார், மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் குடும்ப அங்கத்தினர் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் அலுவலக பணியாளர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு ஜெயந்தி விழாவினை சிறப்பித்தனர்.

No comments

Thank you for your comments