Breaking News

தமிழ்நாட்டில் SBI வங்கியின் முதல் முழுமையான டிஜிட்டல் பேங்கிங் சேவை காஞ்சிபுரத்தில் தொடக்கம்


 📍 காஞ்சிபுரம் | 20.09.2025

ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி, தமிழ்நாட்டில் இந்திய ஸ்டேட் வங்கியின் (SBI) முதல் முழுமையான டிஜிட்டல் பேங்கிங் சேவை காஞ்சிபுரத்தில் இன்று தொடங்கப்பட்டது.

இந்த புதிய சேவை மையத்தை SBI வங்கியின் சேர்மன் சீனிவாசலு செட்டி காணொளி காட்சி (Video Conference) மூலம் தொடங்கி வைத்தார்.

சேவையின் முக்கிய அம்சங்கள்



ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின் பேரில், 2022 ஆம் ஆண்டு SBI இந்தியாவில் 11 கிளைகளை டிஜிட்டல் பேங்கிங் முறையில் துவக்கியது. இன்று தமிழ்நாட்டில் முதன்முறையாக 17 கிளைகள் காணொளி காட்சி மூலம் டிஜிட்டல் சேவையை துவங்கின.

காஞ்சிபுரத்தில் பிராந்திய மேலாளர் செந்தில்நாதன் கல்வெட்டினை திறந்து வைத்தார். பின்னர் பிராந்திய மேலாளர் செந்தில்நாதன், உதவி பிராந்திய மேலாளர் பாலமுருகன் மற்றும் ரிஜா ஆகியோர், வங்கியின் மேலாளர் அருன் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரி பூங்கொடி உடன் சேர்ந்து குத்துவிளக்கு ஏற்றி நடைமுறைகளை துவக்கினர்.

வாடிக்கையாளர்கள், தமிழ்நாட்டில் SBI வங்கியின் முதல் டிஜிட்டல் பேங்கிங் சேவை காஞ்சிபுரத்தில் துவங்கியதில் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

No comments

Thank you for your comments