Breaking News

காஞ்சிபுரம் பாஜக பிரமுகர் ஏ. செந்தில்குமார் ஓபிசி அணி மாநிலத் துணைத்தலைவராக தேர்வு

படவிளக்கம்: பாஜக ஓபிசி அணியின் மாநில துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட காஞ்சிபுரம் பாஜக பிரமுகர் ஏ. செந்தில்குமார்.


 காஞ்சிபுரம், செப்டம்பர் 20:

காஞ்சிபுரத்தை சேர்ந்த பாஜக பிரமுகரான ஏ. செந்தில்குமார் அவர்கள், அக்கட்சியின் ஓபிசி அணியின் மாநில துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களின் ஒப்புதலின் பேரில், ஓபிசி அணியின் மாநிலத் தலைவர் வி. திருநாவுக்கரசு அவர்கள், ஏ. செந்தில்குமாரை அந்த அணியின் மாநில துணைத் தலைவர் பதவிக்கு தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் பின்னர், தேர்வு செய்யப்பட்ட செந்தில்குமாரை அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் சனிக்கிழமை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.





No comments

Thank you for your comments