Breaking News

நபிகள் நாயகம் பிறந்தநாள்: செப்.5 அன்று காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நபிகள் நாயகம் பிறந்த நாள் (05.09.2025) அன்று அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் நாள் முழுவதும் மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்  கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளதாவது, 

தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1989 விதி 23 மற்றும் உரிம நிபந்தனைகளின் படி அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் கீழ்கண்ட நாளில் நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும் என்ற அரசின் அறிவிப்பினை தொடர்ந்து.

ஆகிய நாளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் (IMFL) மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் (Bar) FL1 , FL2, FL3, FL3A மற்றும் FL4A  ஆகியவை நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டுமென காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், தெரிவித்துள்ளார்கள்.

No comments

Thank you for your comments