Breaking News

சிறுணைபெருகல் கிராமத்திற்கு புதிய அரசுப்பேருந்து சேவை - எம்எல்ஏ எழிலரசன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்

காஞ்சிபுரம், செப்.3:

காஞ்சிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுணை பெருகல் கிராமத்திற்கு புதிய அரசுப்பேருந்து சேவையை எம்எல்ஏ எழிலரசன் புதன்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.


காஞ்சிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுணை பெருகல் கிராமத்திற்கு பொதுமக்கள் தங்களது அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்கும்,காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி,கல்லூரி மாணவர்கள், அரசுப்பணிக்கு செல்பவர்கள் ஆகியோர் புதிய பேருந்து சேவையை ஏற்படுத்தி தரக்கோரி காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசனிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.



இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சிறுனைபெருகல் கிராமத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் புதிய பேருந்து சேவை தொடக்க விழா நடைபெற்றது.

காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசனிடம் புதிய பேருந்தை சிறுணைபெருகல் கிராமத்திலிருந்து தொடக்கி வைத்து பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கினார்.

👍சகல தோஷ நிவாரணம் தரும் அரிய தலம் – நவகிரகங்கள் தம்பதியராய் அருள்புரியும் அதிசயம்!

பேருந்து சேவையை தொடக்கி வைத்த பின்னர் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து சிறிது தூரம் அப்பேருந்தில் பயணித்ததுடன் நடத்துநர் மற்றும் ஓட்டுநருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். 

இப்பேருந்து சிறுணைபெருகல் கிராமத்திலிருந்து ஆரியபெரும்பாக்கம், கீழம்பி வழியாக காஞ்சிபுரம் வரை செல்லும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பல ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாமல் இருந்து வந்த பொதுமக்கள் புதிய பேருந்து சேவை ஏற்படுத்தியமைக்காக எம்எல்ஏ எழிலரசனுக்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் காஞ்சிபுரம் ஒன்றியக்குழுவின் தலைவர் மலர்க்கொடி குமார்,மாவட்ட ஊராட்சிக் குழுவின் துணைத் தலைவர் நித்யா சுகுமார்,திமுக ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார்,தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ். சுகுமார் உட்பட ஊராட்சி மன்ற தலைவர்கள்,திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments