Breaking News

காஞ்சிபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றுக் கண்காட்சி

காஞ்சிபுரம்,செப்.17:

காஞ்சிபுரத்தில் பாரதப்பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்த நாளையொட்டி அவரது வாழ்க்கை வரலாற்றுக் கண்காட்சி மற்றும் இலவச பொது மருத்துவ முகாம்,ரத்ததான முகாம் ஆகியன புதன்கிழமை நடைபெற்றது.


பாரதப்பிரதமர் நரேந்திரமோடியின் 75 வது பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள பாபு திருமண மண்டபத்தில் பிரதமரின் வாழ்க்கை வரலாற்றுக் கண்காட்சி நடைபெற்றது.பி

ரதமரின் இளமைக்காலங்கள், நாட்டுக்காக செய்த நலத்திட்டங்கள் பற்றிய விபரங்கள், வெளிநாட்டுத் தலைவர்களுடன் நட்பு வைத்திருப்பது தொடர்பான படங்கள் ஆகியன கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.



கண்காட்சியை பாஜகவின் தேசிய செயலாளர் அரவிந்த் மேனன் திறந்து வைத்து பார்வையிட்டார்.திறப்பு விழாவிற்கு பாஜக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் யு.ஜெகதீசன் தலைமை வகித்தார்.

மாவட்ட பொதுச் செயலாளர் பத்மனாபன், துணைத் தலைவர் அதிசயம் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்காட்சி திறப்பு விழாவையடுத்து இலவச பொதுமருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமில் சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் ஆகியனவற்றுக்கான பரிசோதனைகளும்,இலவசமாக மருந்து மாத்திரைகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை, ஏனாத்தூர் சங்கரா மருத்துவமனை,வெங்கடேசுவரா மருத்துவமனை ஆகியோரும் முகாமில் ருத்துவச் சேவைகளை செய்தனர்.

ரத்த சேகரிப்பு பணியில் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் கல்பனா தலைமையிலான மருத்துவர்கள் ஈடுபட்டிருந்தனர். ரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.

ரத்ததான முகாமில் பாஜக பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு தன்னார்வத்துடன் ரத்ததானம் செய்தனர்.

மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை பாஜக மருத்துவ அணியின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் விஷ்ணுவரதரன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

நிகழ்வுகளில் கட்சியின் நிர்வாகிகள் செந்தில்குமார்,செய்தித் தொடர்பாளர் ஹரிகிருஷ்ணன், ஆறுமுகம் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments