Breaking News

எங்களுக்காக கொள்கை இல்லை ? - சவால் விட்ட விஜய் கட்சி நிர்வாகி

எங்களுக்காக கொள்கை இல்லை?- திமுக, அதிமுக கூட்டத்தை பாருங்கள்,  எங்க கூட்டத்தைப் பாருங்கள் என்று  விஜய் கட்சி நிர்வாகி சவால் விடுத்துள்ளார்.

தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் 147வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யவும், திருவுருவப் படத்திற்கு மலர் தூவி வணக்கம் செலுத்தவும் அரசியல் கட்சி தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். 

அந்த வகையில் இன்று பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டார். 

இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் சங்கர மடம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு, தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பேரணியாக வந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

மேலும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி பெரியார் பிறந்த நாளை கொண்டாடினர்.  கொள்கை தலைவர் பெரியாருக்கு வீரவணக்கம் என முழக்கங்களை எழுப்பி பெரியாருக்கு மரியாதை செலுத்தினர். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் தென்னரசு கூறுகையில், முன்னுருக்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்து பெரியாருக்கு மரியாதை செலுத்தி இருக்கிறோம். பெரியார் தங்கள் கட்சி ஓடிய கொள்கை தலைவர் என கூறிக் கொள்ளும் திராவிட கட்சிகளுக்கு வந்த கூட்டத்தை விட, எங்களுக்கு அதிக அளவு கூட்டம் வந்துள்ளனர். 

எங்களுக்கு கொள்கை இல்லை என விமர்சித்தவர்களுக்கு இதுவே பதில் என தெரிவித்தார். மேலும் கூறுகையில், குழந்தைகள் எங்கள் கட்சியில் சேர்ப்பதாக குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். ஆனால் வாக்காளர் அட்டை வைத்திருந்தவர்கள் மட்டுமே எங்கள் கட்சியின் உறுப்பினராக சேர முடியும் என விளக்கம் அளித்தார்.

No comments

Thank you for your comments