Breaking News

பிரதமர் மோடியின் பிறந்த தினத்தையொட்டி வயலில் மோடி பெயர் வடிவமைப்பு - விவசாயிகள் கொண்டாட்டம்

காஞ்சிபுரம்,செப்.17:

காஞ்சிபுரம் அருகே அவளூர் கிராமத்தில் நன்றாக நெற்பயிர் விளைந்திருந்த வயலின் நடுவே மோடி என்று ஆங்கிலத்தில் வடிவமைத்த விவசாயிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் புதன்கிழமை கொண்டாடினார்கள்.


காஞ்சிபும் அருகே அவளூர் கிராமத்தில் பாஜக கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பிரபாகரன் தலைமையிலும், விவசாய அணியின் மாவட்ட பொதுச் செயலாளர் கே.செல்வம், கூட்டுறவு அணி முன்னாள் மாவட்ட தலைவர் பிரகதீஸ்வரன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் இணைந்து நன்றாக விளைந்திருந்த நெற்பயிரில் மோடி என்று ஆங்கில எழுத்துக்களால் வடிவமைத்திருந்தனர்.


பிரதமர் மோடியின் 75 வது ஆண்டு பிறந்த தினத்தையொட்டி இந்நிகழ்வு நடத்தப்பட்டதாகவும், நெற்பயிருக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.2500 உயர்த்தி வழங்கியமைக்காகவும் பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இவ்வாறு வடிவமைத்திருப்பதாக தெரிவித்தனர்.

பிறந்த நாளையொட்டி அவளூர் கிராமத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.




No comments

Thank you for your comments