Breaking News

காஞ்சிபுரம் அண்ணா நினைவு இல்லத்தில் பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழா | Anna 117th Birth Anniversary Kanchipuram Memorial Celebration

 காஞ்சிபுரம் :

தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் அண்ணா நினைவு இல்லத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி, அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவருடன் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர், சி.வி.எம். பி. எழிலரசன், மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட பொருளாளர் சன் பிரான்டு ஆறுமுகம், மாநகர செயலாளர் சி.கே.வி. தமிழ்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர் எம். எஸ். சுகுமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், பகுதி செயலாளர்கள் சந்துரு, திலகர், தசரதன், வெங்கடேசன் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.



No comments

Thank you for your comments