Breaking News

காஞ்சிபுரம் வையாவூர் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் – இருவர் பலி |Kanchipuram Vaiyavur Road Two-Wheeler Accident Two Dead

 காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே வையாவூர் சாலையில் நடந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழந்ததும், இருவர் காயமடைந்ததும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



உத்திரமேரூர் அருகே சோமநாதபுரத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஹரீஷ், காஞ்சிபுரம் வையாவூர் சாலையில் உள்ள இரும்பு விற்பனையகத்தில் பணிபுரிந்து வந்தார். வழக்கம்போல பணி முடித்து, தனது நண்பர்கள் நிர்மல் மற்றும் சந்தோஷ் உடன் காஞ்சிபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.



அப்போது வையாவூர் குமரன் நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் தனது புல்லட் வாகனத்தில் எதிரே வந்தபோது, இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதியதால் விபத்து ஏற்பட்டது.



இதில் ஹரீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த நிர்மல், சந்தோஷ், வெங்கடேசன் ஆகியோர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில், நிர்மல் உயிரிழந்தார்.



இவ்விபத்தில் இருவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Thank you for your comments