Breaking News

OPPO இந்தியாவின் புதிய எஃப்31 5G series அறிமுகம்...!

கோவை மாவட்டம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில் ஓப்போ இந்தியா தனது பிரபலமான எஃப் வரிசையில் புதிய எஃப்31 5G தொடரை ஐ அறிமுகம் செய்துள்ளது.



இந்திய வாடிக்கையாளர்களின் நீண்டகால நம்பிக்கையும் மென்மையான செயல் திறன் தேவையென்பதை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட எஃப்31 ப்ரோ+, எஃப் 31 ப்ரோ மற்றும் எஃப் 31 என்ற மூன்று மாடல்களில் கிடைக்கிறது.வலுவான கட்டமைப்பு, நீண்ட ஆயுள் பேட்டரி, வெப்பம் குறைக்கும் திறன் மற்றும் வலுவான இணைய இணைப்பு வசதிகளை கொண்ட இந்த ஸ்மார்ட் போன்கள், இந்திய சந்தையில் ரூ 35,000 க்குக் கீழ் கிடைக்கும் மிக உயர்தர சாதனங்களாகும் இந்தியாவின் அதிக வெப்ப சூழலை கருத்தில் கொண்டு, எஃப் 31 5ஜி தொடரை முன்னோ டியான தேமல் டிசைன் கொண்டது. ப்ரோ+ மாடலில் 5,219 mm² அளவுள்ள வேப்பர் சேம்பர்,ப்ரோ மற்றும் எஃப் 31 மாடல்களில் முறையாக 4,363 mm² மற்றும் 4,300 mm² சேம்பர்கள் உள்ளன. இதில் எக்ஸ்பான்டட் கிராஃபைட் அடுக்குகள் சேர்த்து, 43°செல்சியஸ் வரை வெப்ப சூழலிலும் ஸ்மார்ட்போன்கள் தடையில்லாமல் மென்மையாக செயல்பட உதவுகின்றன.சாப்ட்வேர் மட்டத்தில் டூயல் எஞ்சின் ஸ்மூத்னஸ் சிஸ்டம் மற்றும் லுமினஸ் ரெண்டரிங் இன்ஜின் மூலம், ஸ்மார்ட்போன் 72 மாதங்கள் 6 ஆண்டுகள் வரை தொடர்ச்சியாக மென்மையாகவும் நம்பகமாகவும் செயல்படக்கூடியதாக உள்ளது. மேம்பட்ட ஏஐ மற்றும் கேமரா வசதிகள் 50 மெகா பிக்சர்ஸ் மெயின் கேமரா 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா மற்றும் பல ஏஐ வசதிகள் உள்ளன.4கே வீடியோ பதிவு செய்யும் திறனும் கொண்டது.பேட்டரி மற்றும் சார்ஜிங் 7,000mAh பேட்டரி,80W சூப்பர்வூக் ஃப்ளாஷ் சார்ஜ் மூலம் 30 நிமிடங்களில் 58% சார்ஜ்,ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் வசதிகள் பேட்டரி ஆயுள் 5 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும் மேலும் எஃப் 31 தொடரை செப்டம்பர் முதல் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஓப்போ இ-ஸ்டோர், ஃப்ளிப்கார்ட், அமேசான் சேனல்களில் கிடைக்கும் என்பது குறிப்பிடதக்கது.

No comments

Thank you for your comments