Breaking News

விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் ரூ.7.34 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

காஞ்சிபுரம்  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில்,  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப.,  அவர்கள்  16 விவசாய பயனாளிகளுக்கு ரூ.7.34 இலட்சம் மதிப்பீட்டில் வேளாண் இயந்திரம், பயிர்கடன்கள், கால்நடைப் பராமரிப்பு கடன்கள் மற்றும் வேளாண் இடுபொருட்களை வழங்கினார்கள்.



காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு  மைய  கூட்டரங்கில்,  நடைபெற்ற  விவசாயிகள்  நலன்  காக்கும்  நாள்  கூட்டம்  மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்  (19.09.2025)  நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக் கலைத் துறை,  கூட்டுறவுத் துறை,  வருவாய்த் துறை,  ஊரக வளர்ச்சித் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் இந்த  கூட்டத்தில்  கலந்து கொண்டு வேளாண்மை திட்டங்கள் தொடர்பாக அறிவுரைகள்  விவசாயிகளுக்கு வழங்கினார். மேலும் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.

 இன்று நடைபெற்ற விவசாயிகள்  நலன் காக்கும்  நாள்  கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை சார்பில் 1 விவசாயிக்கு ரூ.74,000/- மதிப்பிலான மானியத்துடன் கூடிய வேளாண் இயந்திரம் (பவர் வீடர்) வழங்கினார்.

பவர் வீடர் பெற்ற விவசாயி திரு.மேகநாதன் அவர்கள் இதுவரை பயிர் மற்றும் செடிகளுக்கு இடையேயான தேவையற்ற புற்களை அகற்றுவதற்கு சிறிய மண்வெட்டி போன்றவற்றின் மூலம் செய்து வந்ததால் அதிக நேரமும், பயிர் தேசமடையும்,  பவர் வீடர் இயந்திரத்தின் மூலம் இனி மிகவும் குறைந்த நேரத்திலும்,  பயிருக்கு பாதிப்பும் ஏற்படாவண்ணம் களை நீக்கவும், பணிகளை விரைவாகவும், திறமையாக செய்ய வேளாண் இயந்திரம் வழங்கி என்னுடைய வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி கொள்ள உதவிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார். 

தொடர்ந்து வேளாண்மை துறை மூலம் 10 விவசாய பயனாளிகளுக்கு ரூ. 6,43,500/- மதிப்பிலான  பயிர்க்கடன்கள் மற்றும் கால்நடைப் பராமரிப்பு கடன்களையும், 5 விவசாய பயனாளிகளுக்கு ரூ. 16,536/- மதிப்பிலான (தார்பாய், மக்காச்சோளம், உளுந்து)  வேளாண் இடுப்பொருட்கள் என ரூ.7.34 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில்    மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ்,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி. க.ஆர்த்தி, கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் திருமதி.பா.ஜெயஸ்ரீ, வேளாண் இணை இயக்குநர் திருமதி.கிருஷ்ணவேணி, அரசு அலுவலர்கள் மற்றும்  விவசாய  பெருமக்கள் கலந்து கொண்டனர்.




 

No comments

Thank you for your comments