Breaking News

பிஜேஎம்எம் சங்கம் சார்பில் பச்சிளம் குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கும் விழா...!

தேசிய தொழிலாளர்கள் தினம் மற்றும் விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு பி.ஜே.எம்.எம் அமைப்புசாரா தொழிற்சங்கத்தினர் கோவை அரசு மருத்துவமனையில்,  பிறந்த 17 பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவிக்கும் நிகழ்ச்சி மாநிலத் துணைத் தலைவர் புவனேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் பாண்டித்துரை எஸ் ஆர் ஜுவல்லர்ஸ் ரகுநாதன் ஆகியோ சிறப்பு விருந்தி னர்களாக கலந்து கொண்டு கோவை அரசு மருத்துவ மனையில் உள்ள தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, அங்கிருந்த தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளையும்  வழங்கி குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் அனிவித்தனர். இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட தலைவர்கள் ஸ்ரீரங்கன் சுப்பிரமணி செல்வராஜ் மற்றும் மாவட்ட செய்தி தொடர்பாளர் சைலோ ஆண்டனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மதியம் மாபெரும் அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது..இது குறித்து பேசிய அவ்வமைப்பினர்,விஸ்வகர்மா ஜெயந்தி தேசிய தொழிலாளர்கள் தினமாகவும் உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் இன்றைய தினம் செப்டம்பர் 17 என்பதால் 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினர்.  இந்நிகழ்ச்சியில் பிஜே எம் எம் அமைப்புசாரா சங்கத்தை சார்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments