செவிலியர்கள் கண்தான விழிப்புணர்வு மனிதச்சங்கிலி- எஸ்பி கொடியசைத்து தொடக்கி வைத்தார் Nurses form human chain for eye donation awareness in Kanchipuram, SP flags off the event
காஞ்சிபுரம்,செப்.2:
காஞ்சிபுரம் டாக்டர் அகர்வால் கண்மருத்துவமனை,சங்கரா கண் வங்கி,பன்னாட்டு அரிமா சங்கங்கள் ஆகியவை இணைந்து கண்தான விழிப்புணர்வு மனிதச்சங்கிலி நடத்தினார்கள். காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் எதிரே நடத்திய மனிதச்சங்கிலியினை எஸ்பி கே.சண்முகம் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
👍சகல தோஷ நிவாரணம் தரும் அரிய தலம் – நவகிரகங்கள் தம்பதியராய் அருள்புரியும் அதிசயம்!
காஞ்சிபுரம் பேருந்து நிலைய போக்குவரத்து சிக்னல் முதல் கச்சபேசுவரர் ஆலயம் வரை சாலை ஓரமாக நீண்ட வரிசையில் செவிலியர்கள்,100க்கும் மேற்பட்ட பயிற்சி செவிலியர்கள் கண்தான விழிப்புணர்வு குறித்த பதாகைகளை கையில் ஏந்தியவாறு கலந்து கொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிறைவாக மனிதச் சங்கிலியில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
கண்தான விழிப்புணர்வு மனிதச்சங்கிலி நிகழ்வில் காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ், அகர்வால் கண் மருத்துவமனை நிர்வாகிகள், கண் மருத்துவர்கள்,அரிமா சங்க நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments