செப்.30 வரை கால்நடைகளுக்கு கட்டி தோல் நோய் தடுப்பூசி - ஆட்சியர் தகவல்
காஞ்சிபுரம், செப்.2:
காஞ்சிபுரத்தில் வரும் செப்.30 ஆம் தேதி வரை கால்நடைகளுக்கான கட்டித் தோல் நோய் தடுப்பூசிபணிகள் நடைபெற இருப்பதாக செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
கால்நடைகளில் ஏற்படும் தொற்றுநோயான கட்டி தோல் நோய் வைரஸ் நச்சுயிரியால் ஏற்படும் அம்மை நோயை சார்ந்தது.இந்த நோயானது பூச்சி கடி மூலம் பரவுகிறது. இந்நோய் தாக்கிய மாடுகளில் தோலின் மேல் கட்டிகள் தோன்றும். எனவே கால்நடைகளை தொற்று நோயிலிருந்து காப்பாற்றும் பொருட்டு தடுப்பூசி போடுவது அவசியமாகிறது.
மேலும் இந்நோய் தொற்றின் காரணமாக பால் உற்பத்தி குறையும்,சினைப்பிடிப்பதில் பாதிப்பும் உண்டாகும்.தீவனம் சரியாக உட்கொள்ளாமல் உடல் எடை குறைந்து காணப்படும்.காயங்களால் மாட்டின் தோல் முற்றிலும் பாதிப்படையும்.மேலும் சில மாடுகளுக்கு மடி நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
👍சகல தோஷ நிவாரணம் தரும் அரிய தலம் – நவகிரகங்கள் தம்பதியராய் அருள்புரியும் அதிசயம்!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 116700 கால் நடைகளுக்கு கட்டி தோல் நோய் தடுப்பூசிப்பணி செப்.3 முதல் வரும் செப்.30 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
எனவே கால்நடை வைத்திருப்பவர்கள் தங்களது பசுக்கள்,எருமைகள் மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகள் ஆகியனவற்றிற்கு தடுப்பூசியினை கால்நடை மருந்தகங்கள் மூலம் தவறாது போட்டுக் கொள்ளுமாறும் ஆட்சியரது செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments