Breaking News

ராம் நகரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்...!

கோவை ராம் நகர் பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் நா. கார்த்திக், மத்திய மண்டல குழு தலைவர் மீனா லோகு,மாமன்ற உறுப்பினர் வித்யா ராமநாதன், பகுதி கழக செயலாளர் சேதுராமன், வட்டக் கழக செயலாளர் ராமநாதன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்குட்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு முகாமினை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு. பயனாளிகளுக்கு உடனடி ஆணையினை வழங்கினார். 


இந்த சிறப்பு வாய்ந்த முகாமில் பல்வேறு  துறைகளை சார்ந்த 400க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்பட்டது இதில் சொத்து வரி பெயர் மாற்றம், மற்றும் குடிநீர் வரி பெயர் மாற்றம், ஆதார் கார்டு பெயர் மாற்றம் உள்ளிட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. 



இந்நிகழ்வில்  உதவி ஆணையர் முத்துசாமி, உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் குமரேசன்,கழக நிர்வாகிகள் ரமேஷ் அப்பு ,பெருமாள் முருகேஷ் ,ராம் நகர் கோவிந்தராஜ், அறுவடை நம்பி, ரத்தினவேல், சதீஷ் மகளிர் அணி நிர்வாகிகள், கீதா, ராஜேஸ்வரி, சமீன் பானு, ருக்மணி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments