Breaking News

விருத்தாசலத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் - அமைச்சர் சி. வெ. கணேசன் மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்

விருத்தாசலம்,  செப்.13:



மாவட்ட சுகாதார அலுவலர் பொற்கொடி வரவேற்புரையாற்ற, கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சி. பி. ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நிகழ்ச்சி தொடங்கியது.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி. வெ. கணேசன் மருத்துவ முகாமை துவக்கி வைத்து விழா பெயர் உரையாற்றினார். அதன் பின்னர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

இந்த முகாமில்,

  • பொது மருத்துவம்
  • இருதய மருத்துவம்
  • குழந்தைகள் நல மருத்துவம்
  • மகப்பேறு மருத்துவம்
  • தோள் மருத்துவம் உள்ளிட்ட 17 சிறப்பு மருத்துவ பிரிவுகளில் மருத்துவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.




நிகழ்ச்சியில்,

  • சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன்,
  • விருத்தாசலம் நகர மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ்,
  • நகர மன்ற துணைத் தலைவர் ராணி தண்டபாணி,
  • வட்டார மருத்துவ அலுவலர் ராமநாதன்  உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


செய்தியாளர்: R. காமராஜ் (9080215691)
🎥 ஒளிப்பதிவாளர்: V. வேல்முருகன் (8072117545)

🌸🔥 விபூதி யோகம் – வாழ்வை மாற்றும் தெய்வீக ரகசியம் 🙏 #astrology

No comments

Thank you for your comments