Breaking News

உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன்



காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட திருப்பருத்திக்குன்றம் ஊராட்சியில்   நடைபெற்ற  “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை காஞ்சிபுரம்  சட்டமன்ற உறுப்பினர்   பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, நலத்திட்ட  உதவிகளை வழங்கினார்



காஞ்சிபுரம் வடக்கு  ஒன்றியத்திற்க்குட்பட்ட திருப்பருத்திக்குன்றம் ஊராட்சியில் சுற்றியுள்ள 5க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்காக “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்றது.

இதில்  காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் கலந்து கொண்டு முகாமினை பார்வையிட்டு, 

முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, பதிவு செய்வதையும் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். 


பின்னர் ,கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் பெறப்படுவதையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். 

பின்பு முகாமில் பொதுமக்கள் அளித்த மனுக்கள்மீது பரிசீலனை மேற்கொண்டு தகுதிவாய்ந்த மனுக்கள்மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வகுப்பு சான்றிதழ்,    மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு UDID அட்டை,  மின்னணு குடும்ப அட்டைகள்,   என 30க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு  நலத்திட்ட உதவிகளை   காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன்வழங்கினார்.

இந்நிகழ்வில் ஒன்றிய குழு தலைவர் மலர்க்கொடி குமார், ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார்,ஊராட்சி மன்ற தலைவர் மலர் ராமசந்திரன்,  உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள்,அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments