“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு
👍சகல தோஷ நிவாரணம் தரும் அரிய தலம் – நவகிரகங்கள் தம்பதியராய் அருள்புரியும் அதிசயம்!
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் நகராட்சி, மேத்தா நகரில் நடைபெற்ற இன்று (04.09.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த ஆண்டு சட்டமன்ற பேரவையில் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் துவக்கப்படும் என அறிவித்ததன் படி, ”உங்களுடன் ஸ்டாலின்" என்கிற இத்திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில் 69 முகாம்களும், ஊரகப்பகுதிகளில் 155 முகாம்களும் ஆக மொத்தம் 224 முகாம்கள் நடத்தப்படவுள்ளது.
இதில் முதற்கட்டமாக ஜீலை 15.07.2025 முதல் 14.08.2025 வரை மொத்தம் 78 முகாம்கள் நடைபெற்றதை தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக 19.08.2025 முதல் 12.09.2025 வரை நகர்ப்புற பகுதிகளில் 23 முகாம்களும், ஊரகப்பகுதிகளில் 51 முகாம்களும் ஆக மொத்தம் 74 முகாம்கள் நடைபெற்று வருகிறது.
முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில் மருத்துவ சேவைகள் வழங்க மருத்துவ முகாம்களும் நடத்தபடுகின்றன, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் “உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதன்படி, இன்று காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் நகராட்சி, மேத்தா நகர் வார்டு எண்: 19-க்கு நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, பதிவு செய்வதையும் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்கள்.
பின்பு முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில் மருத்துவ சேவைகள் வழங்க அமைக்கப்பட்டு இருந்த மருத்துவ முகாமினையும் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் பெறப்படுவதையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
தொடர்ந்து முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் அரசாங்கத்தை தேடி நாம் செல்லும் சூழ்நிலை மாறி அரசாங்கம் மக்களை தேடி வருவதால் மிகவும் சந்தோஷமாக உள்ளது. இந்த வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்களது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவித்தார்கள்.
பின்பு முகாமில் பொதுமக்கள் அளித்த மனுக்கள்மீது பரிசீலனை மேற்கொண்டு தகுதிவாய்ந்த மனுக்கள்மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வப்பெருந்தகை, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், குன்றத்தூர் நகரமன்றத் தலைவர் திரு.கோ.சத்தியமூர்த்தி, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


No comments
Thank you for your comments