Breaking News

அம்மா பேரவை நஞ்சுண்டாரம் பகுதி கழகம் சாப்பில் அன்னதானம் மற்றும் அன்பளிப்பு விழா...!



கோவை மாநகர் மாவட்டம் அ.இ.அ.தி.மு.க. அம்மா பேரவை நஞ்சுண்டாரம் பகுதி கழகம் சாப்பில் மீலாடி நபி விழாவை முன்னிட்டு அன்னதானம் மற்றும் குழந்தைகளுக்கு அன்பளிப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் அம்மன் கே. அர்ஜுன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கான அன்பளிப்பு மற்றும் அன்னதான நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் நஞ்சுண்டாபுரம் பகுதி செயலாளர் சாரமேடுசந்திரசேகர் மதுக்கரை நகர கழக செயலாளர் கே. சண்முகராஜா, மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பிரபாகரன்,அம்மா பேரவை பகுதி செயலாளர் அப்துல் ஜலீல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் 1500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் கோட்டை சேட், ஹெல்மேட் அபு, சிராஜ் டைலர், நேதாஜி,ஜெய்ராமன்,அப்துல் காதர், பாபு அன்வர்பாஷா, யாஸ்மீன், யாஸ்மீன்ஆசாத்,பெனாசிர்,மெகராஜ் , மெக்கர் நிஷா,95 டிவிசன் செயலாளர் ஹில்லர், வார்டு செயலாளர் நசீர்,கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளான பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments