“நலன் காக்கும் ஸ்டாலின்” முகாமினை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் ஆய்வு
காஞ்சிபுரம் :
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 'நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் அடிப்படை மற்றும் உயர்நிலை மருத்துவப் பரிசோதனைகளுடன் முழுமையான உடல் ஆரோக்கியப் பரிசோதனைகளும், உயர் இரத்த அழுத்தம். நீரிழிவு நோய், மின் இதய வரைபடம். எக்கோ. அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே முதலியவையும், காசநோய் மற்றும் தொழுநோய் கண்டறியும் பரிசோதனைகளும். ஆரம்ப கட்ட புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும், மேலும் பதினைந்து துறைகளைச் சார்ந்த நிபுணர்களின் மருத்துவ ஆலோசனைகளும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டத்தின் அரசு கீழ் பதிவு அங்கீகார சான்றிதழ் வழங்குதல் மட்டுமின்றி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பிரச்சாரமும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் 40 வயதிற்கு மேற்பட்டோர். நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மன நல பாதிப்புடையோர், இதய நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள். வளர்ச்சிக் குன்றிய குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்டவர்கள். பழங்குடியினர் மற்றும் சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்கள் ஆகியோரை இலக்காகக் கொண்டு இம்முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இன்று காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், ஜமீன் தண்டலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற “நலன் காக்கும் ஸ்டாலின்” முகாமினை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, முகாமில் அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
தொடர்ந்து முகாமில் கலந்துகொண்ட பொதுமக்கள் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தி, மக்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைய செய்து வந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “நலன் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின்மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் முகாம் நடைபெற செய்து, மருத்துவ சேவைகள் அனைத்து மக்களுக்கும் சென்றடைய ஏற்பாடு செய்துவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்தார்கள்.
இதனை தொடர்ந்து டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின்கீழ் 5 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும், 10 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளும், 4 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைகளும் (UDID, தாட்கோ சார்பில் 15 தூய்மைப் பணியாளர்களுக்கு, நலவாரிய அட்டைகளும், தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தின் மூலம் 4 பதிவுபெற்ற தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டைகளையும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.



No comments
Thank you for your comments