காஞ்சிபுரம் அண்ணா நினைவு இல்லத்தில் பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழா – கிழக்கு பகுதி கழகத்தின் மரியாதை | Anna 117th Birth Anniversary Celebration Kanchipuram East District Wing
காஞ்சிபுரம் :
கிழக்கு பகுதி கழக செயலாளர் பாலாஜி அவர்களின் ஏற்பாட்டில், மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் அவர்கள் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா. கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் எஸ்.எஸ்.ஆர். சத்யா, மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, கழக கைத்தறி பிரிவு துணை செயலாளர் யுவராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஆர்.டி. சேகர், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ். சோமசுந்தரம், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக் குமார், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்வபதி, மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் எம்.எம். மதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
🔥 Also Read Tamil Nadu 12th Standard Public Exam Question Papers 2025 (All Subjects) - HSC II Year
அத்துடன் பகுதி கழக செயலாளர்கள் ஜெயராஜ், கோல்டு ரவி, ஒன்றிய கழக செயலாளர்கள் அத்திவாக்கம் ரமேஷ், களக்காட்டூர் ராஜி, பொதுக்குழு உறுப்பினர் ஒ.வி. ரமேஷ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் உதயராமலிங்கம், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் சிந்தன், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் தமின் அன்சாரி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் பி.எஸ். சதீஷ், மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் விஸ்வநாதன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பொருளாளர் காமேஷ் குமார், மாவட்ட பிரதிநிதி ஏரிவாக்கம் ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் விமல் ராஜ், பகுதி கழக துணை செயலாளர் கபாலி, பகுதி கழக இணை செயலாளர் கோல்டு கணேஷ், பகுதி இளைஞரணி செயலாளர் என்.எஸ்.கே. ஸ்ரீதர், மகளிரணி மாதவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அண்ணாவுக்கு மரியாதை செலுத்தினர்.

No comments
Thank you for your comments