Breaking News

காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் “தூய்மை இயக்கம் 2.0” திட்டத்தின் கீழ் கழிவு சேகரிப்பு நிகழ்ச்சி



காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (19.09.2025) “தூய்மை இயக்கம் 2.0” திட்டத்தின் கீழ் கழிவு சேகரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையேற்றார்.

நிகழ்ச்சியில், அரசு அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் அலுவலகங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளும் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். 

பின்னர், மாநகராட்சி அலுவலகங்களில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த கழிவு (E-waste) பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

இதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் அமைந்துள்ள அரசு அலுவலகங்களில் தேவையற்ற பொருட்களை கண்டறிந்து அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி க.ஆர்த்தி, அரசு அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



No comments

Thank you for your comments