காஞ்சிபுரம்: “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் – நாளை (செப்.4) நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
காஞ்சிபுரம், செப்.3:
தமிழக முதல்வர் அறிவித்த “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு குறைதீர் முகாம்கள் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.
மொத்தம் 224 முகாம்கள் (நகர்ப்புறம் 69, ஊரகப்பகுதி 155) நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக 15.07.2025 முதல் 14.08.2025 வரை 78 முகாம்கள் நடைபெற்றன. இரண்டாம் கட்டமாக 19.08.2025 முதல் 12.09.2025 வரை 23 நகர்ப்புற முகாம்களும், 51 ஊரகப்பகுதி முகாம்களும் நடைபெற்று வருகின்றன.
👍சகல தோஷ நிவாரணம் தரும் அரிய தலம் – நவகிரகங்கள் தம்பதியராய் அருள்புரியும் அதிசயம்!
முகாம்களில் பொதுமக்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்படுவதோடு, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இம்முகாம்களில் மட்டுமே வழங்கப்படுகின்றன. முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாட்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதன்படி நாளை 04.09.2025 நடைபெறும் முகாம்கள்:
- காஞ்சிபுரம் மாநகராட்சி அன்னை இந்திராகாந்தி சாலை அண்ணா அரங்கம் (வார்டு 15)
- குன்றத்தூர் நகராட்சி, மேத்தா நகர், மேத்தாலீஸ்வரர் கோயில் மண்டபம் (வார்டு 19)
- உழக்கோல்பட்டு ஊராட்சி தொடக்கப்பள்ளி, காஞ்சிபுரம் வட்டம் (உழக்கோல்பட்டு ஊராட்சிக்கு)
- கருவேப்பம்பூண்டி அரசு நடுநிலைப்பள்ளி, உத்திரமேரூர் வட்டம் (கருவேப்பம்பூண்டி, ஆதவப்பாக்கம், புலிவாய், ஒழுகரை, சிலாம்பாக்கம், காவாம்பயிர் ஊராட்சிகளுக்கு)
- மௌலிவாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகம், குன்றத்தூர் (மௌலிவாக்கம் ஊராட்சிக்கு)
பொதுமக்கள் அனைவரும் தங்கள் குறைகளை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
(வெளியீடு: மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்)
For English Reader :
Kanchipuram, Sep.3:
Under the “Ungaludan Stalin” (With Stalin) grievance redressal programme announced by the Hon’ble Chief Minister of Tamil Nadu, special public grievance camps are being held across Kanchipuram district.
In total, 224 camps are planned, including 69 in urban areas and 155 in rural areas. In the first phase (July 15 – August 14, 2025), 78 camps were conducted. The second phase is currently underway from August 19 to September 12, 2025, with 23 urban camps and 51 rural camps.
Alongside grievance redressal, medical camps are also being organized to ensure the health of participants. Importantly, applications for the Kalaignar Women’s Rights Scheme are being issued only through these camps, and all petitions submitted will be acted upon within 45 days.
Accordingly, on September 4, 2025, camps will be held at the following venues in Kanchipuram district:
- Anna Arangam, Annai Indira Gandhi Road, Kanchipuram Municipality (Ward 15)
- Methaleeswarar Temple Hall, Metha Nagar, Kundrathur Municipality (Ward 19)
- Uzhakkolpattu Panchayat Union Primary School, Kanchipuram Taluk (for Uzhakkolpattu Panchayat)
- Karuveppampoondi Government Middle School, Uthiramerur Taluk (for Karuveppampoondi, Athavapakkam, Pulivay, Ozhugarai, Silambakkam, Kaavampayir Panchayats)
- Maulivakkam Panchayat Office, Kundrathur Town Panchayat (for Maulivakkam Panchayat)
The District Collector Dr. Kalaichelvi Mohan, IAS, has urged the public to participate in these camps with relevant documents and make use of the government schemes.
No comments
Thank you for your comments