காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இளைஞர்களுக்கான "ஐயமும் தெளிவும்" கலந்துரையாடல் நிகழ்ச்சி
காஞ்சிபுரம்:
இளைஞர்களின் சந்தேகங்களுக்கு தெளிவு
நிகழ்ச்சி TNTJ கிளை தலைவர் சாகுல் ஹமீத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு கல்வி, வேலைவாய்ப்பு நேர்காணல், உயர்கல்வி வாய்ப்புகள் போன்ற கேள்விகளை முன்வைத்து தெளிவுகளை பெற்றனர்.
சிறப்பு உரையாற்றிய மாநில பேச்சாளர்
இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில பேச்சாளர் அதீப் MISC அவர்கள் கலந்து கொண்டு ஊக்கமளிக்கும் சிறப்புரையாற்றினார்.
அமைப்பினரின் பங்கேற்பு
இந்நிகழ்வில் கிளை செயலாளர் சாகுல் ஹமீது, பொருளாளர் பாசில், மாணவரணி சுபேதார், தொண்டரணி இர்ஷாத் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
No comments
Thank you for your comments