இன்று (10.09.2025) நடைபெறும் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம்களில் மாற்றம்
காஞ்சிபுரம்:
இதில், ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரை 78 முகாம்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. தொடர்ந்து, ஆகஸ்ட் 19 முதல் நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் 74 முகாம்கள் நடைபெற்று வருகிறது.
துணை முதலமைச்சர் வருகையால் மாற்றம்
10.09.2025 அன்று மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதால், அன்று நடைபெறவிருந்த 6 முகாம்களில் 2 முகாம்கள் நிர்வாக காரணங்களுக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாற்றப்பட்ட முகாம்கள் – விபரம்
- 10.09.2025 அன்று நடைபெற இருந்த கொளப்பாக்கம் ஊராட்சி, குன்றத்தூர் (Peri Urban) பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம், எம்.ஜி.ஆர் நகர், கொளப்பாக்கம் முகாம், 13.09.2025 சனிக்கிழமை அன்று மாற்றி நடத்தப்படும்.
- 10.09.2025 அன்று நடைபெற இருந்த பழந்தண்டலம் ஊராட்சி, குன்றத்தூர் ஒன்றியம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அண்ணாநகர், பழந்தண்டலம் வளாகத்தில் நடத்தப்படவிருந்தது. இதுவும் 13.09.2025 சனிக்கிழமை அன்று மாற்றப்பட்டு நடைபெறும்.
📌 இதன்மூலம், முகாம்கள் திட்டமிட்டபடி நடைபெறுவதோடு, பொதுமக்கள் எந்த சிரமமும் இல்லாமல் கலந்து கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

No comments
Thank you for your comments