Breaking News

கே.எம்.சி.ஹெச் மருத்துவ கல்லூரி சார்பில் தடாகத்தில் ஊரக மருத்துவ மையம் திறப்பு விழா!

கோவை மாவட்டம் தடாகம்  அனுவாவி சுப்பிரமணியர் திருக்கோயில் அருகில்  பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கே.எம்.சி.ஹெச் மருத்துவ கல்லூரி சார்பில் ஊரக மருத்துவ மையத்தை முன்னாள் அமைச்சர் மற்றும் கரூர் சட்டமன்ற உறுப்பினர்  வி. செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.திறப்பு விழாவிற்கு கேஎம்சிஹெச் தலைவர்  டாக்டர் நல்லா ஜி பழனிசாமி, துணைத்தலைவர் டாக்டர் தவமணி தேவி பழனிசாமி மற்றும் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இது குறித்து மருத்துவமனை தலைவர் நல்லா ஜி. பழனிசாமி செய்தியாளர் களிடம் கூறுகையில்  இப்புதிய ஊரக மையத்தில் புறநோயாளிகள் மருத்துவர் ஆலோசனை பெறுவதற்கான கட்டணம் ரூபாய் 30 மட்டுமே செலுத்தி ஒரு வருடம் முழுவதும் எத்தனை முறை வேண்டுமானாலும் நோயாளிகள் மருத்துவர்களின் ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம். மேலும் இம்மையத்தில் இரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, இரத்தத்தில் உப்பின் அளவு, கிரியாடினின், இரத்ததில் சர்க்கரை அளவு, பாப் ஸ்மியர் பரிசோதனை, இரத்த வகை, மலேரியா பாரசைட், மார்பு எக்ஸ்ரே, இசிஜி போன்ற அனைத்து பரிசோதனைகளும் இலவசம், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நபர்களுக்கு மூன்று நாட்களுக்கான மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும் மேலும் கிராமப்புற ஏழை எளிய மக்களின் நலன் காப்பதற்காக உருவாக்கப்பட்ட கேஎம்சிஹெச் மருத்துவ கல்லூரி ஊரக மருத்துவ மையத்தினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.



இந்நிகழ்ச்சியில்  திமுக மாவட்ட செயலாளர்கள் நா. கார்த்திக் தோ.அ ரவி தளபதி முருகேசன் மற்றும் கழக நிர்வாகிகள் முக்கிய பொறுப்பாளர்கள் ஊர் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments