Breaking News

ஆர்ப்பாக்கம் அருகே சாலை விபத்தில் ஊர்க்காவல் படை வீரர் பலி

 காஞ்சிபுரம், செப்.10:

காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன், மாகரல் காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வந்தார்.



நேற்று இரவு ரோந்து பணிக்கு சென்ற அவர், அதிகாலை 4 மணியளவில் காவல் நிலையத்தில் பதிவேடு கையெழுத்திட்டுவிட்டு வீடு திரும்ப முயன்றார். அந்த நேரத்தில் திருப்பிலிவனத்தைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனர் விஜயின் இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் கேட்டு சென்றார்.


ஆர்ப்பாக்கம் ஏரிக்கரை அருகே வந்தபோது, எதிரே கட்டுப்பாட்டை இழந்த மினி டிரக் மோதி, இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.




உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசன் வழியிலேயே உயிரிழந்தார்.

காயமடைந்த பேருந்து ஓட்டுனர் விஜய்க்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த விபத்தில் ஊர்க்காவல் படை வீரர் பலியானது காவல்துறை மற்றும் அவரது குடும்பத்தினரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




No comments

Thank you for your comments