தகாத உறவு - வெட்டப்பட்ட 2 பேர் தலைகளுடன் வேலூர் மத்திய சிறையில் சரண்
வேலூர், செப்.11:
சுமார் 55 வயதுடைய கொளஞ்சி என்பவர், இரண்டு வெட்டப்பட்ட மனித தலைகளுடன் சிறை அதிகாரிகளிடம் தன்னை கைது செய்யுமாறு கூறி சரணடைந்தார்.
அதன்பின், துண்டிக்கப்பட்ட தலைகளுடன் நேரடியாகவே வேலூர் மத்திய சிறைக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.
இன்று மாலை 5.00 மணியளவில், குற்றவாளி கொளஞ்சி மற்றும் துண்டிக்கப்பட்ட இரண்டு தலைகளும், பாகாயம் காவல் ஆய்வாளர் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவம் காவல் ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது. இதனால் சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏதுமில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
No comments
Thank you for your comments