Breaking News

காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் – மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது

  காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் மாவட்ட சுகாதார பேரவை இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில், கிராமப்புற/நகர்ப்புற சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் தேவையான வசதிகள், மருத்துவ சேவைகள் மேம்பாடு குறித்த விவாதங்கள் நடைபெற்றன.

தடுப்பூசி குளிர்சாதன கருவிகள், டிஜிட்டல் எக்ஸ்-ரே, புதிய தடுப்பூசி வாகனங்கள், நடமாடும் பல் மருத்துவ வாகனங்கள், சூரிய மின்கலன்கள், ஆய்வக உபகரணங்கள், ஆழ்துளை கிணறு, மேல்நிலைத் தொட்டி, பாதை சீரமைப்பு, சுற்றுசுவர், கட்டிடப் புதுப்பிப்பு, 7 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற தேவைகள் பட்டியலிடப்பட்டு மாநில சுகாதார பேரவைக்கு பரிந்துரைக்க அனுப்பப்பட்டன.

நிகழ்ச்சியில், பாலாஜி மருத்துவ கல்லூரி நிர்வாகிகள் குழந்தைகள் எடை பார்க்கும் கருவியை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வழங்கினர்.

இந்நிகழ்வில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மரு.எம்.ஹிலாரினா ஜோசிட்டா நளினி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.த.ரா.செந்தில், ஒன்றிய குழுத்தலைவர் திருமதி மலர்க்கொடி குமார், மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments