முதலமைச்சர் கோப்பை,மாவட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு
காஞ்சிபுரம், செப்.13:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் நிகழாண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டிகள் கடந்த 28.8.25 முதல் 10.9.2025 வரை நடைபெற்றது.
🌸 “திருமணத் தடைகள் நீங்கும் தெய்வீக திருத்தலம்”
🌺 “தோஷங்களைத் தீர்த்து, தம்பத்ய வாழ்வைத் தரும் தலமாம்...”
பள்ளி, கல்லூரி மாணவ,மாணவியர்கள்,மாற்றுத்திறனாளிகள்,அரசு ஊழியர்கள், பொதுமக்கள் ஆகிய 5 பிரிவுகளில் 15 வகையான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட அளவில் நடைபெற்றது.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரிப்பிரிவை சேர்ந்த விளையாட்டு வீரர்கள்,வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா பேரறிஞர் அண்ணா விளையைட்டு மைதானத்தில் நடைபெற்றது.
கல்லூரிப்பிரிவை சேர்ந்த விளையாட்டுப் போட்டிகளில் மொ1த்தம் 7174 மாணவ,மாணவியர் பங்கு பெற்றிருந்தனர். இப்போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு பதக்கங்களும்,சான்றிதழ்களும் வழங்கும் விழாவிற்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்து சான்றிதழ்களை வழங்கினார்.
No comments
Thank you for your comments