Breaking News

“நலன் காக்கும் ஸ்டாலின்” முகாம் தொடக்கம்

காஞ்சிபுரம்  :

காஞ்சிபுரம்  மாநகராட்சிக்குட்பட்ட தனியார் பள்ளியில் இன்று (13.09.2025) நடைபெற்ற “நலன் காக்கும் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப.,  காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 'நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் அடிப்படை மற்றும் உயர்நிலை மருத்துவப் பரிசோதனைகளுடன் முழுமையான உடல் ஆரோக்கியப் பரிசோதனைகளும், உயர் இரத்த அழுத்தம். நீரிழிவு நோய், மின் இதய வரைபடம். எக்கோ. அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே முதலியவையும், காசநோய் மற்றும் தொழுநோய் கண்டறியும் பரிசோதனைகளும். ஆரம்ப கட்ட புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும்,  மேலும் பதினைந்து துறைகளைச் சார்ந்த நிபுணர்களின் மருத்துவ ஆலோசனைகளும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டத்தின் அரசு கீழ் பதிவு அங்கீகார சான்றிதழ் வழங்குதல் மட்டுமின்றி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பிரச்சாரமும் வழங்கப்பட்டு வருகிறது. 

மேலும் 40 வயதிற்கு மேற்பட்டோர். நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மன நல பாதிப்புடையோர்,  இதய நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள். வளர்ச்சிக் குன்றிய குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்டவர்கள். பழங்குடியினர் மற்றும் சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்கள் ஆகியோரை இலக்காகக் கொண்டு இம்முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இன்று காஞ்சிபுரம்  மாநகராட்சிக்குட்பட்ட தனியார் பள்ளியில் இன்று நடைபெற்ற “நலன் காக்கும் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் தொடங்கி வைத்து, பார்வையிட்டு, முகாமில் அளிக்கப்படும் சிகிச்சை முறை மற்றும் பரிசோதனைகளை ஆய்வு மேற்கொண்டார்கள். 

தொடர்ந்து  முகாமில் கலந்துகொண்ட பொதுமக்கள,  மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் மூலம் மக்களுக்காக மருத்தவ சேவைகள் செய்துவரும் தமிழ்நாடு அரசுக்கும்,   மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்தார்கள். 

இதனை தொடர்ந்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும்,  மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைகளும் (UDID மாவட்ட ஆட்சித்தலைவர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினார்கள்.

இம்முகாமில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி.எம்.மகாலட்சுமி யுவராஜ், இணை இயக்குநர்  (மருத்துவப் பணிகள்)  மரு.எம்.ஹிலாரினா ஜோசிட்டா நளினி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.த.ரா செந்தில், மருத்துவ குழுவினர், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments