காஞ்சிபுரம் 18வது வட்டத்தில் 38 சிசிடிவி கேமராக்கள் அமைப்பு – அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்தார்
📅 14.09.2025 | காஞ்சிபுரம்
நிகழ்ச்சி விவரம்
பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில், திமுக வர்த்தக அணி மாநில துணைச் செயலாளர் வி.எஸ். ராமகிருஷ்ணன் தனது சொந்த செலவில் 38 சிசிடிவி கேமராக்களை பொருத்தி மக்களுக்கு அர்ப்பணித்தார்.
🌸 “திருமணத் தடைகள் நீங்கும் தெய்வீக திருத்தலம்”
🌺 “தோஷங்களைத் தீர்த்து, தம்பத்ய வாழ்வைத் தரும் தலமாம்...”
இந்நிகழ்ச்சியில் மாவட்டக் கழகச் செயலாளர் மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் தலைமையில், மாநகரக் கழகச் செயலாளர் சி.கே.வி. தமிழ்ச்செல்வன் வரவேற்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர்
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று கேமராக்களை துவக்கி வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
கலந்து கொண்டோர்
- காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம்
- சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன்
- மேயர் மகாலட்சுமி யுவராஜ்
- வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம். குமார்
- மாவட்ட பொருளாளர் சன் பிராண்ட் ஆறுமுகம்
- மண்டல குழு தலைவர் செவிலிமேடு மோகன்
- தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ். சுகுமார்
- தலைமை பொதுக்குழு உறுப்பினர் சிகாமணி
- இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ்
- மாநகராட்சி கவுன்சிலர்கள் எஸ்.கே.பி. கார்த்தி, சுதாகர், குமரவேல்
- வழக்கறிஞர் பிரிவு அரவிந்தன்
- வட்ட செயலாளர்கள் மண்டி சம்பத், இளைஞரணி மனோஜ்
மாநில, மாவட்ட, மாநகர, பகுதி கழக பொறுப்பாளர்கள் மற்றும் பல சமூக ஆர்வலர்களும் பங்கேற்றனர்.
No comments
Thank you for your comments