காஞ்சிபுரத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவன பொதுக்குழு கூட்டம்
காஞ்சிபுரம்,செப்.4:
தமிழகம் இயற்கை வேளாண் விளைபொருட்கள்,உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் 3வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மை ஏற்றுமதி மற்றும் நுண்ணறிவு பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
இந்நிறுவனம் தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் வேகவதி உபவடி பகுதி கிராமங்களான விப்பேடு, விஷார், கூரம், கோயம்பாக்கம், அவளூர், சிறுணை, வதியூர், கிளார் உள்ளிட்ட கிராமங்களை ஒருங்கிணைத்து கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தின் பொதுக்குழு கூட்டத்தில் வேளாண்மை விற்பனைத்துறை துணை இயக்குநர் நா.ஜீவராணி கலந்து கொண்டு அரசின் திட்டங்கள் மற்றும் ôய்ப்புகள் குறித்து விரிவாக விளக்கினார்.
புதிய செயலாளராக கன்னியப்பன், பொருளாளராக பூங்காவனம் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனர். கோகிலா நன்றி கூறினார். ஏற்பாடுகளை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கீர்த்தனா செய்திருந்தார்.

No comments
Thank you for your comments