Breaking News

காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் 8 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

காஞ்சிபுரம், செப்.4:

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அறநிலையத்தறை சார்பில் வியாழக்கிழமை 8 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு தலா ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசைப்பொருட்களும் வழங்கப்பட்டது




இந்து சமய அறநிலையத்துறை சார்பில் காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 8 ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

நிகழ்வுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன்,மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ்,அ றநிலையத்துறை காஞ்சிபுரம் சரக உதவி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் மணமக்களுக்கு தலா ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள சீர் வரிசைப்பொருட்களை வழங்கினார்கள்.

👍சகல தோஷ நிவாரணம் தரும் அரிய தலம் – நவகிரகங்கள் தம்பதியராய் அருள்புரியும் அதிசயம்!

குமரகோட்டம் முருகன் மூலவர் புகைப்படம், 4 கிராம் அளவுள்ள தங்கத்தாலி, பீரோ, கட்டில், மிக்ஸி, பட்டுச்சேலை மற்றும் பட்டு வேட்டி, கைக்கடிகாரம், பூஜைப் பொருட்கள் உட்பட மொத்தம் 28 வகையான சீர்வரிசைப்பொருட்கள் வழங்கப்பட்டன.

No comments

Thank you for your comments